பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நேற்று மாலை நடந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்கின்றனர்.
இந்தச் சந்திப்பு சென்னை அருகேயுள்ள கோவளம் கடற்கரை விடுதியில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் தங்கியிருக்கிறார்.