இந்திய-சீன எல்லையில் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இது, நாட்டு மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, புகைப்படங்கள் எரித்து போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்தின்போது, அந்நாட்டின் தேசியக்கொடியும் எரிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய வீரர்கள் நால்வர் கவலைக்கிடம்!