தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய பாதுகாப்புப்படை வளாகத்தில் ஆளில்லா விமானம் இயக்கிய சீன நபர் கைது!

கொல்கத்தா: இந்திய பாதுகாப்புப்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகமான வில்லியம்ஸ் கோட்டை அருகே டிரோனை (ஆளில்லா விமானம்) இயக்கிய சீனா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Drone

By

Published : Mar 18, 2019, 8:01 AM IST

கொல்கத்தாவில்இந்தியபாதுகாப்புப்படையின் கிழக்குப் பிராந்தியதலைமையகமானவில்லியம்ஸ் கோட்டை வளாகத்திலிருந்து குறிப்பிட்ட சில கி.மீ.வரை டிரோன் போன்ற ஆளில்லா விமானங்களை இயக்குவதுதடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கோட்டையிலிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் சீனாவைச் சேர்ந்த லீ ஜிவே(Li Zhiwei) என்பவர் டிரோன் ஒன்றைப் பறக்கவிட்டுள்ளார்.

இதனை கவனித்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர், சந்தேகத்தின் அடிப்படையில் லீயை பிடித்து, ஹேஸ்டிங் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, நேற்று அவர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மார்ச் 25ஆம் தேதி வரை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இந்திய விமானப் படையினர் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டனர். இதன்பிறகு, இந்தியாவை நோட்டமிட அனுப்பப்பட்ட நான்கு பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன்களை பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்தனர்.



ABOUT THE AUTHOR

...view details