இந்தியா - சீனா இருநாட்டு எல்லை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ டெல்லி வந்தடைந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை! - சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ
டெல்லி: இந்தியா - சீனா எல்லை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் விவாதிக்க சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வந்தடைந்தார்.
முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே அக்டோபர் மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டின்போது, கையெழுத்தான திட்டங்களை அமல்படுத்த இருநாட்டு பிரதிநிதிகளும் ஆய்வு செய்யவுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியை சீனா உரிமை கோரி வரும் நிலையில், அதற்கு இந்தியாவும் போட்டியிடுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாட்டு பிரதிநிதிகள் 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டவில்லை. எனவே, இந்தச் சந்திப்பின்போது எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது அவசியம் என்று இருதரப்பு பிரிதிநிதிகளும் வலியுறுத்தபோவதாகக் கூறப்படுகிறது.