தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய-சீனா எல்லை விவகாரம்: 7ஆவது சுற்று பேச்சுவார்த்தை! - கிழக்கு லடாக்கில் பதற்றம்

டெல்லி: இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் 7ஆவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

chinese-diplomat-to-be-part-of-corps-commander-level-talks-monday
chinese-diplomat-to-be-part-of-corps-commander-level-talks-monday

By

Published : Oct 12, 2020, 8:36 AM IST

கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா இடையே 7ஆவது சுற்று ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை இன்று(அக்.12) நடக்கிறது. இதில், சீனப் படைகளை விரைவாக திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனப்படைகள் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் காரணமாக இரு நாட்டுகளுக்கிடையே மோதல் அபாயம் உருவெடுத்தது.

அதைத்தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், உயர் மட்ட அரசு அலுவலர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 10ஆம் தேதி, மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை விரைந்து விலக்கிக்கொள்வது உள்பட ஐந்துஅம்ச உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், ஏழாவது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட 'சுசுல்' என்ற இடத்தில் இன்று(அக்.12) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய தரப்புக்கு 'லே' பகுதியைச் சேர்ந்த 14ஆவது படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார். லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், மத்திய வெளியுறவு அமைச்சக இணைச்செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இடம் பெறுகிறார்கள்.

கிழக்கு லடாக்கின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப் பெற செயல்திட்டம் உருவாக்குவதுதான், இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம்.

களத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், அடுத்த 4 மாதங்களுக்கு நிலவும் குளிர்காலத்தின்போது பதற்றத்தை மேலும் அதிகரிப்பதை தவிர்க்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details