சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெய் ஷூவாங் பீஜிங்கில் இன்று (டிச27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் நிதானமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் அப்பகுதியில் நிலவி வரும் பதற்றத்தையும் தணிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “காஷ்மீரில் ஆகஸ்ட்டில் சுயாட்சியின் கதவுகள் பூட்டப்பட்ட பின்னர் (சிறப்பு அந்தஸ்து நீக்கம்) அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மோதல்களை இருதரப்பு உரையாடல்கள் மூலம் தீர்க்க வேண்டும்.
இரு நாடுகளும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாக பராமரிக்க வேண்டும்” என்றார். சீனாவின் இரும்புபிடியில் சிக்கி மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜின்ஜியாங் பல்கலைக்கழக தலைவர் தாஷ்போலட் தியோக் குறித்தும் சீன செய்தித் தொடர்பாளர் ஜெய் பதிலளித்தார்.
தியோக் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். எனினும் அவரின் இருப்பிடம் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை. லஞ்சப் புகாரில் கைதாகி தியோக் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தியோக்கின் உறவினர்கள் அவரை காணவேண்டும், அவரின் இருப்பிடத்தை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கெஞ்சி மன்றாடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும் இவ்விஷயத்தில் சீன அரசு எந்த பிடியும் கொடுக்கவில்லை.
பாகிஸ்தான் விவகாரம்: இந்தியாவுக்கு சீனா திடீர் அறிவுரை - ஜம்மு காஷ்மீர் விவகாரம்
பீஜிங்: இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தி உள்ளது.
China urges Pakistan, India to exercise restraint
ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யா, சீனா, ஈரான் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி!