தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன ராணுவத்தில் 20க்கும் குறைவானோர் உயிரிழப்பு - முதன்முறையாக செய்தி வெளியிட்ட சீன பத்திரிகை - சீனாவின் 70 பேர் காயம்

இந்தியா-சீனா ராணுவங்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், சீன ராணுவத்தினர் 20க்கும் குறைவானோரே உயிரிழந்ததாகவும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் எனும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

china-admits-less-than-20-casualities-70-injuries-in-galwan-clash
china-admits-less-than-20-casualities-70-injuries-in-galwan-clash

By

Published : Jun 23, 2020, 1:33 PM IST

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ஆகிய இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே சென்ற வாரம் மோதல் வெடித்தது. அதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் சீன ராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேதம் பற்றி அந்நாட்டு அரசு எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை.

இதனிடையே சீன விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த சீன வீரர்கள் குறித்து அந்நாட்டின் பிரபல பத்திரிகையான குளோபல் டைம்ஸ் முதன்முறையாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது என்பதாலும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், 20க்கும் குறைவான உயிரிழப்பு எண்ணிக்கையை சீன ராணுவம் வெளியிட்டால் அது இந்திய அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்றகாரணங்களாலேயே சீன வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை வெளியிடவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20க்கும் குறைவான சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் சீன வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்தியாவில் தகவல்கள் வெளியாகின.

இந்திய மக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இந்திய ராணுவத்தை விட சீன ராணுவத்திற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவில் பேசி வருகின்றனர்'' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திய தேசியவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன கட்டுரை!

ABOUT THE AUTHOR

...view details