இது குறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடு, எச்சரிக்கை உணர்வுடன் ஒளிபரப்ப வேண்டும். நிகழ்ச்சிகளில் திரைப்பட நடிகர்களை போல் குழந்தைகளை நடனமாடச் செய்வது, அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளை ஒழுங்கீனமாக சித்திரிக்கக் கூடாது- மத்திய அரசு கெடுபிடி!
டெல்லி: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஒழுங்கீனமாக சித்திரிப்பதை தவிர்க்க வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ஒளிபரப்புத் துறை
மேலும் வயதுக்கு பொருந்தாத வகையில், இசை, நடனம், பாடல், வசனங்களில் இடம்பெறச் செய்யக் கூடாது. அதேபோல் குழந்தைகளை தவறாக சித்திரித்து எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பக் கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள அலைவரிசை ஒளிபரப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Last Updated : Jun 19, 2019, 9:38 AM IST