தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தடுப்பூசி!

ஹைதராபாத்: எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் போடப்பட்டவதன் மூலம் குழந்தைகளை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Childhood vaccinations might protect children from COVID-19
Childhood vaccinations might protect children from COVID-19

By

Published : Jun 27, 2020, 1:35 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால், இதுவரை 96,99,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,90,933 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 52,51,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இப்பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் சீனா, இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் விகிதம் குறைவாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கு எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் போடப்பட்டதன் மூலம் அவர்களது உடம்பில் தானாக உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, கரோனா வைரஸை வரவிடாமல் தடுக்கிறது என லிதுவேனியன் மற்றும் குர்தீஷ் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் சார்ஸ்-கோவிட் 2 தொற்றை எதிர்கொள்வதற்காக மனிதர்களின் உடலில் செலுத்தப்படும் எஸ் புரோட்டின், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடலில் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டால், அதனை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் சிறு வயதில் இருக்கும்போது, பல வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், அவர்களது உடம்பில் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

லிதுவேனியன் மற்றும் குர்தீஷ் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி, எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் போடப்படும்போது, அதன்மூலம் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்கள் உடம்பில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.

எனவே, 15 முதல் 20 ஆண்டுகள் வரை, அவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுக்கும். இருப்பினும் இதற்கு ஆதரவு அளிக்க சோதனை பகுப்பாய்வு தேவைப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details