கடந்த 2004 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் உயிரிழந்ததோடு பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது. அதன் 16 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு தினப் பதாகை முன்பு, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்பினர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பிறகு கடல்நீரில் பால் ஊற்றி சுனாமியால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கடற்கரையில் பாலூற்றி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி! - மலர் தூவி அஞ்சலி
புதுச்சேரி: சுனாமி தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
narayanasamy
இதேபோல் வம்பா கீரப்பாளையம் மீனவர்கள் ஊர்வலமாக வந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கடலில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் சுனாமியில் இறந்த தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை நினைத்து கதறி அழுதனர்.
இதையும் படிங்க:சுனாமி தினம்! - கடலில் மலர் தூவி அஞ்சலி!