டெல்லியில் தப்லிகி ஜமாஅத் இஸ்லாமிய மாநாடு நடந்த தேதியன்று உத்தரப் பிரதேசத்தில் நாம நவமி கண்காட்சியை முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் நடத்தினார் என்று ஆங்கில முன்னணி பத்திரிகை ஆசிரியர் சித்தார்த் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு எதிராக இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நோக்கம் கொண்ட இழிவான செயல்.
உண்மைக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரின் கருத்தில் எங்கே குற்றம் உள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.