தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இதையே பிள்ளையாரும் விரும்புவார்' - பிளாஸ்மா தான முகாமுக்கு ப. சிதம்பரம் பாராட்டு - Chidambaram

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பதில் பிளாஸ்மா தான முகாமை நடத்த முடிவெடுத்தவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம்
சிதம்பரம்

By

Published : Jul 2, 2020, 11:48 AM IST

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், கரோனாவின் தாக்கம் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடப் போவதில்லை என பலர் அறிவித்துள்ளனர். மேலும், விழாவுக்கு பதில் பிளாஸ்மா தான முகாம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பையில் விநாயகர் விழாவை இந்த ஆண்டு கொண்டாடுவதில்லை என்றும் அதற்கு பதிலாக பிளாஸ்மா தான முகாம் நடத்துவது என்றும் முடிவெடுத்தவர்களைப் பாராட்டுகிறேன். இதையே பிள்ளையாரும் விரும்புவார்" என பதிவிட்டுள்ளார்.

கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சிக்கி தவித்துவருகின்றன. கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை அளிக்கப்பட்டுவருகிறது. குணமடைந்த நோயாளிகளின் ரத்தத்திலிருந்து கரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளிகளின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீன நிறுவனங்களை இனி எந்த திட்டங்களிலும் அனுமதிக்கமாட்டோம் - நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details