நாட்டின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்த பட்டியலான தேசிய குடியுரிமை பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 19 லட்சம் மக்கள் இந்தியர்களே இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "தேதிய குடியுரிமை பதிவேடு ஒரு சட்ட செயல்முறை என்றால், இந்தியர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்ட 19 லட்சம் மக்களை இந்த பதிவேடு எப்படிக் கையாளும்"
"வங்கதேசம் தேசிய குடியுரிமை பதிவேட்டால் பாதிக்கப்படாது என்று உறுதியளித்திருக்கும் நிலையில், 19 லட்சம் மக்களை இந்தியா என்ன செய்யப்போகிறது. இந்த 19 லட்சம் நபர்களும் நிச்சயமற்ற பதட்டத்துடனும், குடியுரிமையும் மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையிலேயே எவ்வளவு காலம்தான் வாழவேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.