ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் காலத்தில் இது நடந்ததால் அவரின் பெயரையும், அந்த நிறுவனத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தியதால் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ வழக்கில் சேர்த்தது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.