குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் தரத்தை ஆராய பல மாநிலங்களிலிருந்து மாதிரி பெறப்பட்டது. மூன்று கட்டமாக பெறப்பட்ட மாதிரிக்களை இந்திய தர நிர்ணயம் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆராய்ச்சி முடிவுகளை நேற்று டெல்லி வெளியிட்டு பேசுகையில், "குழாய் மூலம் பெறப்படும் தண்ணீர் தரமற்று இருப்பதாக நாடுமுழுவதும் இருந்து புகார் வந்தது. இதற்காக பல மாநில தலைநகரங்களிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டுவருகிறது. மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது தான் அரசின் நோக்கமாக இருக்கிறது.
தண்ணீர் தர நிர்ணயத்தை கட்டாயமாக்க வேண்டும். இது குறித்து மாநில முதலமைச்சர்கள் விசாரிக்க வேண்டும். முதல் கட்டமாக டெல்லியின் பல பகுதிகளிலிருந்து மாதிரிக்கள் பெறப்பட்டது. இரண்டாவது கட்டமாக 20 மாநில தலைநகரங்களிலிருந்து மாதிரிகள் பெறப்பட்டது.