தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா வந்த 269 பேர்... விமான நிலைய அலுவலர்கள், பயணிகளிடையே வாக்குவாதம்...!

கொல்கத்தா: வங்கதேசத்திலிருந்து வந்த பயணிகளுக்கும், விமான நிலைய அலுவலர்களுக்கும் இடையே தனிமைப்படுத்தல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

chaos-at-kolkata-airport-as-authorities-demand-returnees-to-go-under-hotel-quarantine
chaos-at-kolkata-airport-as-authorities-demand-returnees-to-go-under-hotel-quarantine

By

Published : May 28, 2020, 1:47 PM IST

வங்கதேசத்தில் சிக்கித் தவித்த 269 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்கள் நிர்பந்திக்க, பெரும்பாலான பயணிகளிடம் பணம் இல்லாததால் தங்களது சொந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். இதனால் விமான நிலையத்தில் பயணிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பயணி ஒருவர் பேசுகையில், ''கரோனா வைரஸ் காரணமாக வங்கதேசத்தில் இருக்கும் என் அலுவலகத்திலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். நாங்கள் இந்தியாவிற்கு வரும்போது அரசு சார்பாக எங்களுக்கு அனைத்து உதவிகளும் மேற்கொள்வதாகக் கூறினார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு அரசு சார்பாக எவ்வித உதவிகளும் செய்யப்படவில்லை.

விமான நிலைய அலுவலர்கள் - பயணிகள் இடையே வாக்குவாதம்

இந்த நேரத்தில் எங்களை ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்கள் நிர்பந்திக்கிறார்கள். எங்களிடம் சுத்தமாக பணமில்லை. அதனால் மாநில அரசு எங்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். எங்களின் வீட்டினில் நாங்கள் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் எங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறோம்'' என்றார்.

இதையும் படிங்க:சமய மாநாடு வழக்கு- பாஸ்போர்ட்களை சமர்ப்பிக்காத வெளிநாட்டினர்

ABOUT THE AUTHOR

...view details