நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 விண்கலத்தின் 20 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தவிருந்த நிலையில், என்ஜினில் வாயுக்கசிவு காரணமாக, கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த என்ஜின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கவிருக்கிறது.