தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓராண்டைக் கடந்த சந்திரயான்-2: 4,400 முறை நிலவைச் சுற்றியதாம்! - சந்திரயன்-2 விண்கலம்

சென்னை: சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டைக் கடந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

chandrayaan-2
chandrayaan-2

By

Published : Aug 21, 2020, 1:22 PM IST

இது குறித்து இஸ்ரோ, "நாட்டின் இரண்டாவது நிலவு விண்கலமான சந்திரயான்-2 கடந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்படி இன்று (ஆக. 21) சந்திரயான்-2 தனது ஓராண்டை நிறைவு செய்துவிட்டது.

நிலவின் சுற்றுப்பாதையில் இதுவரை சந்திரயான்-2 நான்காயிரத்து 400 முறை சுற்றிவந்துள்ளது. அதன் அனைத்துப் பாகங்களும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அது நிலவின் சுற்றுப்பாதையை அடைந்ததிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை செயல்பட போதுமான எரிபொருள் உள்ளது.

மேலும் சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்பு நீர் இருப்பு, துருவ பனி இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்தது. சந்திரயான்-2 இன்னும் விரிவாக நிலவின் உண்மையான மேற்பரப்பு தோற்றம், நீர் ஆதாரங்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'நிச்சயம் ஒரு நாள் இஸ்ரோ நிலவுக்கு மனிதர்களை அனுப்பும்' - சிவன் உறுதி

ABOUT THE AUTHOR

...view details