டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்ஒரு காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆசாத், டெல்லி ஆளுநர் அனில் பைஜாலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மோதல் நடந்த வடகிழக்கு டெல்லியைப் பார்வையிட விரும்புவதாகவும், அவ்வாறு பார்வையிடச் செல்லும்போது தனக்கு உரிய காவல் பாதுகாப்பை வழங்க டெல்லி காவலர்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.