தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டாலினை சந்திக்கிறார் கேசிஆர்; மூன்றாவது அணிக்கு அச்சாரமா..? - telengana cm chandrasekara rao

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவு வெளியிடும் நாள் நெருங்கும் வேளையில் திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று சந்திக்க இருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் -கேசிஆர் சந்திப்பு

By

Published : May 13, 2019, 8:51 AM IST

Updated : May 13, 2019, 9:11 AM IST

திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வர உள்ளதை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க சந்திரசேகர ராவ் தொடர் முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சென்னை வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன் முதலில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : May 13, 2019, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details