சந்திராபூர் (மகாராஷ்டிரா):ஆண் கரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பெண் செவிலியர்கள்.
சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது. ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள்.
விதைகளால் ஆன ராக்கிக்கு படு கிராக்கி!
இந்த நாளில் ஓர் ஆண் தனது கையில் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக பாவித்து அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.
கரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டிய செவிலியர்கள் இச்சூழலிலும், கரோனா காலம் என்பதைத் தாண்டி மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூரிலுள்ள அரசு மருத்துவமனையில் பணிசெய்யும் பெண் செவிலியர்கள், அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆண் கரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை போற்றிய சம்பவம் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.