மக்களவை தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மோடியின் கீழ் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல், மம்தா, மாயாவதி, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத் யாதவ், தேவகவுடா - குமாரசாமி உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - Rahul Gandhi
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இவர்களை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பம் முதலே சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப்பின் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சந்திரபாபு நாயுடு டெல்லி வந்துள்ளார். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ராகுல் காந்தி சந்திப்புக்குப் பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை டெல்லியில் இன்று சந்திக்க உள்ளார் நாயுடு. அதன்பின் உத்தரபிரதேசம் செல்லும் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்திக்க உள்ளார்.