ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கரோனா சூழலை மனதில் கொண்டு சண்டிகர் அஞ்சல் பிரிவு, ‘ராக்கி மெயில் பாக்ஸ்’ எனும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
ரக்ஷா பந்தன்: சண்டிகரில் ‘ராக்கி மெயில் பாக்ஸ்’ அறிமுகம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சண்டிகர் அஞ்சல் பிரிவு ‘ராக்கி மெயில் பாக்ஸ்’ எனும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு அனுப்ப முடியும். அஞ்சல் அலுவலகங்கள் உங்கள் ராக்கி கயிறை உரியவர்களிடம் சேர்க்கும் பணியை செய்யவுள்ளது. சண்டிகரில் 43 அஞ்சல் அலுவலகங்கள், மொகாலியில் 25 அஞ்சல் அலுவலகங்கள், ரோபரில் 27 அஞ்சல் அலுவலகங்கள் இப்பணியை மேற்கொள்கிறது.
இதுகுறித்து சண்டிகர் அஞ்சல் பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் மனோஜ் யாதவ், அனைத்து முக்கியமான அஞ்சல் அலுவலகங்களிலும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தனுக்கு ஒருநாள் முன்பே உரியவர்களிடம் ராக்கி சென்று சேர்ந்துவிடும். பிற மாநிலங்களுக்கு ராக்கி அனுப்ப ஜூலை 25 கடைசி தேதி, மாநிலத்துக்குள் ராக்கி அனுப்ப ஜூலை 28 கடைசி தேதி ஆகும். 35 வெளிநாடுகளுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் ராக்கி அனுப்பலாம் என தெரிவித்தார்.