தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2020, 9:10 PM IST

ETV Bharat / bharat

'அவசர சட்டமுன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிக்கக் கூடாது'

சண்டிகர்: வேளாண்மை தொடர்பான மத்திய அரசின் மூன்று அவசர சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாதென சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார்.

"அவசர சட்டமுன்வடிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது"  - சிரோமணி அகாலி தளம்
"அவசர சட்டமுன்வடிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது" - சிரோமணி அகாலி தளம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (செப்டம்பர் 14) மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

குறிப்பாக, பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளமும் இந்தச் சட்ட முன்வடிவுகளை எதிர்த்துவருகிறது.

இந்நிலையில், கோதுமை உள்ளிட்ட ஆறு ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்தார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், "கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தும் மத்திய அரசின் முடிவு போதுமானதாக இல்லை.

இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வேளாண் பொருள்களின் உற்பத்தி விலை அதிகரித்துவரும் சூழலில், டீசல் உள்ளிட்ட உள்ளீடுகளின் விலை உயர்வோடு ஒப்பிட்டால் இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை ஈடுகட்டாது.

விவசாயம் தொடர்பான மத்திய அரசின் மூன்று அவசர சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது" என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details