காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு அறிவித்த லாக்டவுன் திட்டம் தோல்வியைச் சந்தித்துள்ளது. நரேந்திர மோடி அரசு கரோனா கட்டுப்பாடு தொடர்பாக எதிர்பார்த்த பலன்கள் லாக்டவுன் மூலம் நிறைவேறவில்லை.
மத்திய அரசின் லாக்டவுன் யுக்தி தோல்வி - ராகுல் காந்தி - இந்தியா கரோனா பாதிப்பு
14:57 May 26
டெல்லி: மத்திய அரசு அறிவித்த லாக்டவுன் தோல்வி அடைந்தநிலையில் எதிர்கால திட்டம் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், எதிர்காலம் தொடர்பாக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.நரேந்திர மோடியே லாக்டவுன் தோல்வியடைந்தது என ஒப்புக்கொள்வார்.
எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள அரசின் திட்டங்கள் என்ன. பிரதமரிடம் இருந்து பதிலை மக்கள் எதிர்பார்க்கின்றனர். நான் கடந்த கால தவறுகளைக் கூறி அரசை குறைகூற விரும்பவில்லை. அரசின் திட்டங்கள், தயாரிப்பு பணிகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
ஏற்கனவே நாட்டில் வேலையின்மை சிக்கல் தீவிரமாக இருந்தது. தற்போது பெருந்தொற்று காரணமாக அது மேலும் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் ஒழுங்காக செயல்படாத நிலையில், இனியாவது அரசு இந்த மோசமான சூழலை சீரமைக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு