பாஜகவின் தாய் கட்சி ஜன சங்கமாகும். இந்த கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய ராஜே சிந்தியா. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், முதலமைச்சர் டி. பி. மிஸ்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி ஜன சங்கத்தில் இணைந்தார்.
விஜயா ராஜே சிந்தியாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் விஜய ராஜே சிந்தியாவின் மகளுமான வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், "அம்மா மகாராஜ், ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் நினைவை போற்றும் வகையில் வெளியாகவுள்ள 100 ரூபாய் காயின் மூலம் அவரின் பெருந்தன்மை, உழைப்பு ஆகியவை பறைசாற்றப்படுகிறது.