கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இன்று உறுதிசெய்தார். 2018ஆம் ஆண்டு கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர தாக்குதலை ஏற்படுத்திய இந்த நிபா வைரஸ் 17 பேரின் உயிரை காவு வாங்கியது. தற்போது மீண்டும் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
'நிபா'க்கு யாரும் பயப்பட வேண்டாம் நாங்க இருக்கோம்! - மத்திய அரசு - Union Health Minister
டெல்லி: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதியளித்துள்ளார்.
harshvardhan
இந்நிலையில் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் ஹர்ஷ்வர்தன், கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சருடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளேன். நிபா வைரஸ் தாக்குதலுக்கு தேவையான மருத்துவ பூர்வமான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்பதால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்தார்.