மத்தியப் பிரதேசத்தில் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அம்மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு 50 டன் ஆக்ஸிஜன் சப்ளை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
50 டன் ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் - சிவராஜ் சிங் நன்றி! - பிரதமர் நரேந்திர மோடி
போபால்: மத்தியப் பிரதேசத்தில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 50 டன் ஆக்ஸிஜன் சப்ளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் தனது ட்விட்டரில், "கரோனா பேரிடர் காலத்தில் தக்க நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்க ஒப்புதல் அளித்து உதவிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி" எனக் கூறியிருந்தார்.
தற்போது இந்த 50 டன் ஆக்ஸிஜன் வழங்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஎன்ஓஎக்ஸ் (INOX) நிறுவனத்தின் மற்றொரு கிளை இன்னும் ஆறு மாதங்களில் மத்தியப் பிரதேசம் ஹோஷங்காபாத் மாவட்டம் மொஹொசா பகுதியில் அமைக்கப்படும் என சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வழங்கும் 50 டன் ஆக்ஸிஜன் கூடுதலாக கிடைப்பதால், மத்தியப் பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு 180 டன் ஆக்ஸிஜன் சப்ளை இருப்பு இருக்கும்.