கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தங்குவதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல்வேறு வட மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் கும்பல் கும்பலாய் உணவு, உறைவிடம், உறக்கமற்றுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
தற்போது இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, 'கரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல், தவித்து வருகின்றனர். வேலை இழந்து பசியால் வாடி, பல இன்னல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.