மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது. முன்னதாக ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.