மத்திய அரசின் பணியாளர் திட்டத்தின் கீழ் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பணிபுரியும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கிவருவது வழக்கம்.
அந்தவகையில் ஆணையத்திற்கான தொலைதூர குழுவாக செயல்படும் தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலர் பதவிகளுக்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் ஊழல் கண்காணிப்பு துறையிலிருந்து தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியலை மத்திய அரசு கோரியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் மாதம் மத்திய அரசு முன்வைத்த வேண்டுகோளின்படி மாநில அரசுகள், போதுமான எண்ணிக்கை கொண்ட பரிந்துரை பட்டியலை இன்னும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஊழல் கண்காணிப்பு வாரியத்தின் இயக்குநர் பதவி, பல்வேறு இடைநிலைப் பணியாளர்கள், சேவை அலுவலர்களின் பிரதிநிதித்துவத்திற்காக இதுவரை பெறப்பட்ட விருப்ப மனுக்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளதால், குறைந்தபட்ச பரிந்துரையைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
குறிப்பாக துணை செயலர், இயக்குநர் மட்டத்தில் நீடிக்கும் குறைவான பணியாளர்கள் இருப்பதால் நிர்வாகத்தில் கடுமையான இடைவெளிகளை ஏற்படுத்துகிறது.