வெங்காய விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தேசிய தலைநகரில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உள்நாட்டு உற்பத்தி 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் காரணம்.
எகிப்து,துருக்கி நாடுகளில் இருந்து வரபோகும் வெங்காயங்கள் இந்த நிலையில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சம் டன் வெங்காயத்தை எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன்படி, துருக்கி, எகிப்தில் இருந்து 17,090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து 6,090 மெட்ரிக் டன் வெங்காயம் இம்மாத மத்தியில் இறக்குமதியாகும். துருக்கியில் இருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயம் இம்மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இறக்குமதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எகிப்து வெங்காயம் ஆந்திரா வருகை.!