தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது- மெகபூபா முப்தி - காஷ்மீர்

ஸ்ரீநகர்: எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஊழல் வழக்கை ஒரு ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மெகபூபா முப்தி

By

Published : Aug 4, 2019, 10:25 PM IST

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்களை, அம்மாநில காவல் துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் காஷ்மீரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக விடுதி நிர்வாகம் அனைத்துக் கட்சி கூட்டத்தை ரத்து செய்யும்படி அரசியல் கட்சிகளை கேட்டுகொண்டது. இதனால் விடுதியில் நடக்கவிருந்த அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, "காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என காவல்துறையினர் விடுதி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதனால் என் வீட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும்.

பிரிவினைவாத அமைப்புகளை எப்படி மத்திய அரசு அனுகியதோ அதேபோல், தற்போது அரசியல் கட்சிகளை அணுக ஆரம்பித்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தகவல் கிடைத்த உடனே ஊழல் வழக்கு குறித்து விசாரிக்க பரூக் அப்துல்லாவை சண்டிகருக்கு அழைத்து சென்றனர். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஊழல் வழக்கை ஒரு ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்திவருகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details