Latest National News - பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நிகழ்ந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த ரிசர்வ் வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்குப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாகத் தடைவிதித்துள்ளது. இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளிலிருந்து ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்தத் திடீர் அறிவின் காரணமாகப் பஞ்சாப்-மகாராஷ்டிரா வங்கியிலிருந்து தன் சொந்த சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் போனதால் கதறி அழும் ஒரு பெண்ணின் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி.