தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடையை மீறி வெளியில் சுற்றினால் 14 நாள்கள் மருத்துவமனை கண்காணிப்பு - 14 நாள் மருத்துவமனை கண்காணிப்பு

டெல்லி: நகரங்களில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Center directs States to ensure no movement of people across cities
Center directs States to ensure no movement of people across cities

By

Published : Mar 29, 2020, 2:38 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதில், இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றுமாறு கூறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டதேவைகளுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடுமையான நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோரிய பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details