உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸை புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “கரோனா ஊரடங்கால் புதுச்சேரி அரசு வருவாய் இழந்துள்ளது. மேலும் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய புதுச்சேரி மாநிலத்திற்கான நிதியும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.