பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெறும் புத்தகத்தை மட்டும் புரட்டினால் மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும். ஆனால் அதிலிருந்து மாறுபட்ட சில மாணவர்களுக்கு தனித்திறமையுடன் இருப்பதோடு, அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு. அந்த வகையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் திருமலாநேதி சாய் என்பவர் செல்ஃபோன் சார்ஜ் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளார்.
துணி நகரத்தைச் சேர்ந்த சாய், தற்போது முதலாமாண்டு பாலிடெக்னிக் பயின்று வருகிறார். இவர் தனது சிறுவயதிலிருந்தே சிறு சிறு தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தற்போது, அவர் தண்ணீர் பைப்பில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளார். அவர் பழைய பிளாஸ்டிக், 5 வாட்ஸ் பேட்டரி, யுஎஸ்பி கேபிள், எல்இடி பல்ப், இரண்டு சுவிட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த புதிய கருவியை சாய் உருவாக்கியுள்ளார்.