தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ஆன்லைனில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ தயாராகவில்லை’

சிபிஎஸ்இ.,யின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என முன்னாள் சிபிஎஸ்இ தலைவர் அசோக் கங்குலி தெரிவித்துள்ளார்.

அசோக் கங்குலி
அசோக் கங்குலி

By

Published : Jun 27, 2020, 4:01 PM IST

கரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் இணையதளங்கள் வழியாக கற்பிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆங்கில மொழித் திறனை சோதிக்கும் டோஃபல் (TOEFL) தேர்வு, மாணவர்களின் யோசிக்கும் திறன், ஆங்கிலம், தர்க்க அறிவு உள்ளிடவற்றை சோதிக்கும் ஜிஆர்இ (GRE) தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இது குறித்து விளக்கும் விதமாக முன்னாள் சிபிஎஸ்இ தலைவர் அசோக் கங்குலியிடம் பேசினோம். அவர் கூறுகையில், “சிபிஎஸ்இ.,யின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு சிபிஎஸ்இ பள்ளிகள் முன்வராது என்றே நான் நினைக்கிறேன். இப்போது வரையிலும் சிபிஎஸ்இ அமைப்பு ஆன்லைனில் தேர்வு நடத்த தயாராகவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு 3 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம்.

மாணவர்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து தொடச்சியாக பதிவுசெய்தால், பெருந்தொற்று போன்ற நெருக்கடியான காலங்களில், அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க முடியும்” என்றார்.

’ஆன்லைன் தேர்வு கடினம்’

தொடர்ந்து அவர் பேசும்போது, “பள்ளிகளில் ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது கடினமானது. பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகத் தேர்வுகளை நடத்தும்போது நெட்வொர்க் சிக்கல்களுடன், கணினி உள்ளிட்ட மூலப்பொருள்களின் பற்றாக்குறையும் ஏற்படலாம். அதற்காக இதை முடியவே முடியாத காரியம் என்று சொல்லிவிட முடியாது. இதை செய்து முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம்” என்றார்.

சமீபத்தில் கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இது குறித்து அசோக் கங்குலி கூறுகையில் ”மூன்று தேர்வுகளுக்கு மேல் எழுதிய மாணவர்களுக்கு, அதில் சிறந்த மூன்று மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்படும், அனைத்துப் பாடங்களுக்கும் அந்த சராசரி மதிப்பெண்ணே வழங்கப்படும்.

மூன்று பொதுத் தேர்வுகளை மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு, அதிலிருந்து சிறந்த இரண்டு மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அனைத்துப் பாடங்களுக்கும் அந்த சராசரி மதிப்பெண்ணே வழங்கப்படும். மூன்று தேர்வுகளுக்கும் குறைவாக, அதாவது ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளை மட்டுமே எழுதியவர்களுக்கு அக மதிப்பீடு மற்றும் செயல்முறைத் தேர்வுகளின் செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ‘கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’- வலுக்கும் கோரிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details