கோவிட்-19 பரவலின் தீவிரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிபிஎஸ்சி மறுதேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 10, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பையும் சிபிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் மாதம் துணைத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம். தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் cbse.nic.in என்ற தளத்தில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.