ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் காலத்தில் இது நடந்ததால் அவரின் பெயரையும், அந்த நிறுவனத்தை நேரடியாகவோ, முறைமுகமாகவோ கட்டுப்படுத்தியதால் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ வழக்கில் சேர்த்தது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சிதம்பரம் அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மேலும் ஐந்து நாட்கள் சிதம்பரத்தை காவலில் வைக்க நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்ற நீதிமறன்ம் அவரை ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.