தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

' நடிகர் குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு' - டெல்லி போலீஸ்  அறிவிப்பு - Cash reward announced for information on Deep Sidhu

டெல்லி: பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது.

டெல்லி
டெல்லி

By

Published : Feb 3, 2021, 4:18 PM IST

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறைச் சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த கம்பத்தில் ஏறி கால்சா என்னும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதையடுத்து, அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தை பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். நடிகர் தீப் சிங் சித்தின் செயல் வன்முறையைத் தூண்டும்வகையில் அமைந்திருந்ததாக குற்றஞ்சாட்டி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில், டிராக்டர் பேரணி வன்முறையில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து குறித்து தகவல்கள் அளிப்போருக்கு சன்மானமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. அதே போல், பூட்டா சிங், சுக்தேவ் சிங் உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கிடைத்தவுடன் சித்து உடனடியாக கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:குழந்தையுடன் நின்ற பெண்ணை ஓடஓட விரட்டி கோடாரியால் தாக்குதல்! பதைபதைக்கும் சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details