தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் 15 விழுக்காடாக குறைந்த கரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாம் நிலையாக பரவிவரும் கரோனா தொற்றின் பாதிப்பு 15 விழுக்காடாக குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

By

Published : May 29, 2020, 4:50 PM IST

cases-through-contacts-decreased-to-15-per-cent-in-the-second-covid-wave-kerala-health-minister
cases-through-contacts-decreased-to-15-per-cent-in-the-second-covid-wave-kerala-health-minister

கேரளாவில் கரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் அம்மாநில மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, "கேரளாவில் கரோனா தொற்றின் முதல் கட்ட பாதிப்பு 30 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பிற்குள்ளாகியுள்ளவர்கள் 15 விழுக்காடாக குறைந்துள்ளது.

மே மாதம் 7ஆம் தேதி மாநிலத்தில் 517 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக இருந்தது.

பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, போக்குவரத்துகள் மீண்டும் இயக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளனர். அவர்களில் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆயினும் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரசு இலவச சிகிச்சைகளை தொடர்ந்து அளித்துவரும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் மே 11ஆம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வளைகுடா பகுதியிலிருந்து திரும்பிய அவர் கடுமையான நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டுவந்தார்.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை எங்களால் கண்டறியப்பட முடியவில்லை. அலுவலர்கள் அவர்களது பயண விவரங்களையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்தும் ஆய்வு நடத்திவருகின்றனர். மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆயினும் மாநிலத்தில் தற்போதுவரை சமூகப் பரவல் எதுவும் ஏற்படவில்லை" என்றார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தகவலின்படி, கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,088. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு பின் எந்த நெருக்கடியையும் கேரளாவால் சமாளிக்க முடியும்: முதலமைச்சர் பினராயி விஜயன்...!

ABOUT THE AUTHOR

...view details