தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்துள்ளது - கோவிட்-19 ஊரடங்கு

பெங்களூரு : கரோனா ஊரடங்கால் கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Suraksha App  Sexual assault cases  Bangalore City Police  COVID-19 lockdown  COVID-19 pandemic  COVID-19 cases  Coronavirus outbreak  பாலியல் வன்கொடுமைகள்  சுரக்‌ஷா செயலி  கோவிட்-19  கோவிட்-19 ஊரடங்கு  பாலியல் வன்புணர்வு வழக்குகள்
Suraksha App

By

Published : May 18, 2020, 2:53 PM IST

கர்நாடகாவில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 50 நாள்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்துள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததை தொடர்ந்து, பெங்களூரு காவல் துறையினர் பெண்களின் பாதுகாப்பிற்காக சுரக்‌ஷா என்ற செயலி அறிமுகப்படுத்தினர்.

இந்த செயலியானது பெண்களுக்கு ஆபத்து நேரிடும் போது ஒரு பொத்தானை அழுத்தினால் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் இருக்கும் இடத்தை தகவல் அனுப்புகிறது. இதன் மூலம் ரோந்துப் பணியில் இருக்கும் காவல் துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து காப்பாற்ற முடியும்.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த செயலியை பயன்படுத்தி தகவல் தெரிவித்து வந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 906, மே மாததில் 200 பெண்கள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். இந்த எண்ணிக்கை விகிதமானது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்துள்ளதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details