தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இப்போ எப்படி காப்பி அடிக்கரானு நானும் பார்க்கறேன்! - மாணவர்கள்

பெங்களூரு: தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஹாவேரி மாவட்டத்திலுள்ள கல்லூரி எடுத்த நடவடிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Cardboard boxes

By

Published : Oct 18, 2019, 8:02 PM IST

Updated : Oct 18, 2019, 8:19 PM IST

பொதுவாக தேர்வுகளை பள்ளி, கல்லூரிகள் வைப்பதும் அத்தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடிப்பது வாடிக்கையான ஒன்று. இதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், மாணவர்கள் புதுப்புது ஐடியாக்களுடன் காப்பியடிப்பார்கள்.

இந்நிலையில், மாணவர்களைக் காப்பியடிக்க விடாமல் தடுக்க அனைவரையும் தூக்கி சாப்பிடுவதுபோல் ஐடியா ஒன்றை உருவாக்கியுள்ளது கர்நாடக மாநிலம் ஹைவேரி பகுதியை அடுத்துள்ள பகத் பி.யூ கல்லூரி.

சென்ற வாரம் இங்கு நடந்த தேர்வு ஒன்றில், அனைத்து மாணவர்களின் தலையில் அட்டை பெட்டி கவிழ்க்கப்பட்டு தேர்வு எழுதியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று கல்வித் துறை அலுவலர்கள் அந்தக் கல்லூரிக்கு கடும் எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: நோயாளிக்கு ஊசி போடும் துப்புரவு பணியாளர்: வீடியோ வைரல்

Last Updated : Oct 18, 2019, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details