ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், கள்ள நோட்டு கடத்தல் வழக்கில் கைதாகினர். அவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவருக்கு புற்றுநோய் இருப்பது, எட்டு மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரேடியோதெரபி சிகிச்சை எட்டு மாதங்களாய் வழங்கப்பட்டு வருகிறது.
'அம்மா மடியில் உயிர் பிரிய வேண்டும்..!' - ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் மன்றாடும் கைதி! - சிறை கைதி
ஜெய்ப்பூர்: 'தன்னுடைய உயிர் அம்மா மடியில் பிரிய வேண்டும்' என்று கள்ளநோட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கைதி, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி பலமுறை நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதால், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்தது. இதைத் தொடர்ந்து, தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி இல்லை என்றும், வழக்கு முடிவதற்குள் தான் இறந்து விட வாய்ப்புள்ளதாகவும், தன்னுடைய அம்மா மடியில் படுத்துக் கொண்டே உயிர் போக வேண்டும் என்றும், அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இளைஞர் உருக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர், இளைஞரின் ஜாமீன் மனு குறித்து ராஜஸ்தான் காவல் துறை வரும் ஜூன்.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.