இது தொடர்பாக புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த காந்திராஜிக்கு ஒராண்டு பதவி நீட்டிப்பு கேட்டு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அக்கோப்பினை எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் நிராகரித்துவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசின் கூடுதல் வழக்கறிஞர்களாகத் திறமையாகப் பணியாற்றிவரும்போதும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான மாலா என்பவரை புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளார். இந்த தன்னிச்சையான நியமனம் கண்டனத்திற்குரியது.