நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து கடந்த சனிக்கிழமையோடு ஓராண்டு நிறைவுப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் முடிவுகள் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலிகளின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், “இந்த முடிவுகள் விவசாயிகள், தெருக்கடை வியாபாரிகள், குறு (மைக்ரோ), சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும்” என்றார்.