குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் துர்கமான் கேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்து ராஜேந்தர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
டெல்லியை பற்றிய போராட்ட தீ! - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
Delhi
தங்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, டிசம்பர் 15ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்கள், காவல் துறையினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்?