தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் முதியவரை முட்டி தூக்கிய காளை மாடு - முதியவரை முட்டி தூக்கிய மாடு

கோதாவரி: அமலாபுரத்தில் கூடையில் பழங்களை கொண்டுச் சென்ற முதியவரை காளை மாடு முட்டித் தள்ளும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

bull
bull

By

Published : Oct 17, 2020, 10:49 PM IST

ஆந்திராவில் அமலாபுரம் நகராட்சியில் உள்ள சுபலம்மா கோயில் அருகே முதியவர் ஒருவர் பழங்கள் நிறைந்த கூடையுடன் நடந்துச் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த காளை மாடு எதிர்பாராதவிதமாக அவரை முட்டி தள்ளியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் பழுதடைந்து கிடந்த செப்டிக் டேங்க் துளையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

முதியவரை முட்டி தள்ளும் மாடு

பதறியடித்து வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதியவரை முட்டி தள்ளிய மாடு கூடையில் இருந்த பழங்களை சாப்பிட ஆரம்பித்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'அண்ணா பல்கலைக்கழகத்தில் கை வைப்பது மத்திய அரசின் சேட்டை' - சீமான்

ABOUT THE AUTHOR

...view details