கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று பாதித்துள்ளது. அதில் டெல்லியில் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லி மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், '' டெல்லி மாநில நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாகிறது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் மாநில அரசு நிதியை செலவழிக்க, பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்பதால் வேறு வழியில்லை'' என பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதுவிதமான அரசியல் சகாப்தம் தொடங்கிவிட்டது - கெஜ்ரிவால்